பணியில்
உங்கள் நாளைத் தெளிவுடன் தொடங்குங்கள்
வெளியீட்டுக் கூட்டத்திற்கு முன், திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட அம்சத்தை வழங்குவதாக வாடிக்கையாளர் மின்னஞ்சல் வரைவில் இன்னும் குறிப்பிடப்பட்டிருப்பதை உங்கள் டாட் கவனிக்கிறது. தயாரிப்பு குறித்த சமீபத்திய முடிவுகளைச் சரிபார்த்து, திருத்த வேண்டியவற்றைப் பரிந்துரைக்கிறது.
பணியில்
வேலையையும் வாழ்க்கையையும் ஒத்திசைவாக வைத்திருங்கள்
நாளைய நிதி மதிப்பாய்வு இப்போது உங்கள் மகளின் நிகழ்ச்சியுடன் மேற்பொருந்துகிறது. உங்கள் dot அனைவருக்கும் ஏற்ற மற்றொரு நேரத்தைக் கண்டறிகிறது. நீங்கள் ஒப்புதல் அளித்ததும், அது மீட்டிங்கை வேறு நேரத்திற்கு மாற்றி, உங்கள் குறிப்புகளைத் தயாரிக்கும்; எனவே உங்கள் மகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள நேரம் கிடைக்கும்.
பணியில்
உங்கள் அடுத்த விளக்கக்காட்சியைச் சிறப்பாக வழங்குங்கள்
விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் மீண்டும் வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர். உங்கள் டாட், புள்ளிவிவரங்களை வாடிக்கையாளர் கருத்துகளுடன் ஒப்பிட்டு, என்ன மாறியுள்ளது என்பதை ஆராய்ந்து, தலைமை நிர்வாகத்திற்கான உங்கள் விளக்கக்காட்சியைப் புதுப்பிக்கிறது. புதிய புள்ளிவிவரங்கள் வரும்போதெல்லாம், அனைத்தையும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறது.
பணியில்
கருத்துகளை மேம்பாடுகளாக மாற்றுங்கள்
வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரே கோரிக்கை மீண்டும் மீண்டும் வருகிறது. உங்கள் டாட் அதைத் தயாரிப்புத் தரவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்து, ஒரு சிறிய மேம்பாட்டை உருவாக்கிச் சோதித்துள்ளது. செயல்படும் மாற்றங்களையும் அவற்றின் சாதக பாதகங்களையும் பொறியியல் குழுவுடன் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
வாழ்க்கையில்
இரவு உணவைப் பற்றிய கவலையை விடுங்கள்
விநியோக நேரங்கள் மற்றும் மொத்தச் செலவுடன் இரவு உணவுத் தேர்வுகளை உங்கள் டாட் வழங்குகிறது. உணவைத் தேர்ந்தெடுத்து, ஆர்டருக்கு ஒப்புதல் அளியுங்கள். அது உங்கள் வாசலை வந்தடையும் வரை உங்கள் டாட் கண்காணிக்கட்டும்.